1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. agra businessman drops dead within seconds while dancing on state

விருது வாங்கியவுடன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலதிபர்

agra
ஆக்ராவில் சிறந்த தொழிலதிபர் என்ற விருதை வாங்கிய தொழிலதிபர் ஒருவர் சந்தோஷத்தில் மேடையிலேயே நடனம் ஆடினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சமீபத்தில் ஆக்ராவில் விருது விழங்கும் விழா ஒன்று நடைபெற்றது. இதில் ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் சிறந்த தொழிலதிபர் என்ற விருதை 53 வயது விஷ்ணுபாண்டே என்பவருக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கும் மேடையில் அவரது பெயர் வாசிக்கப்பட்டதும் சந்தோஷமாக எழுந்து மேடைக்கு சென்ற விஷ்ணுபாண்டே விருதை மகிழ்ச்சியுடன் பெற்று கொண்டார்

விருது கிடைத்த மகிழ்ச்சியில் விருதினை கையில் வைத்து கொண்டே மேடையில் நடனமாடினார். அவரை உற்சாகப்படுத்தும் வகையில் அனைவரும் கைதட்டினர். இந்த நிலையில் திடீரென அவர் மேடையில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்கிருந்த மருத்துவர் ஒருவர் சோதனை செய்தபோது விஷ்ணுபாண்டே மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தார். இதனால் விருது வழங்கும் விழா சோகமயமானது.
அடுத்த கட்டுரையில்
சென்னை மென்பொறியாளர் மூளைச்சாவு: உடலுறுப்பு தானத்திற்கு பெற்றோர் சம்மதம்