ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (08:15 IST)

இன்று முதல் அக்னிபத் ராணுவ பணிக்கு விண்ணப்பிக்கலாம்! – விவரங்கள் உள்ளே..!

Agneepath
இந்திய ராணுவத்தின் முப்படைகளில் தற்காலிக ராணுவ பணியில் சேர்வதற்கான அக்னிபத் திட்டத்தின் கீழ் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டு குறுகிய கால ராணுவ பணி வழங்கும் அக்னிபத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தின் கடற்படை, காலாட்படை, விமானப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதற்கான வயது வரம்பு 17 அரை வயது முதல் 21 வயது வரை ஆகும். அதாவது இத்திட்டத்தில் ராணுவத்தில் சேர விரும்புவோர் டிசம்பர் 29, 1999ம் ஆண்டிலிருந்து ஜூன் 29,2005ம் ஆண்டிற்குள் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணி முதல் விமானப்படை மற்றும் கடற்படை பணிகளுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஜூலை 5ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது.

joinindianarmy.nic.in, indianairforce.nic.in என்ற வலைதளங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.