புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (15:07 IST)

அக்னிபத் திட்டம் - போராட்டத்திற்கு சீமான் ஆதரவு!

அக்னிபத் திட்டம் - போராட்டத்திற்கு சீமான் ஆதரவு!
அக்னிபத் திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு என சீமான் அறிவிப்பு. 
 
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, அக்னிபத் திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது கோரிக்கை மிக நியாயமானது, தார்மீகமானது. அவர்களது போராட்டக்கோரிக்கை வெல்ல வாழ்த்துகிறேன்! அவர்களுக்குத் துணைநிற்கிறேன்! அதே கோரிக்கையை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியும் எழுச்சிமிகுப் போராட்டங்களை மாநிலமெங்கும் முன்னெடுக்கும் எனப் பேரறிவிப்பு செய்கிறேன்.
 
இத்தோடு, அக்னிபத’ திட்டத்துக்கெதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கைகளுக்காகப் போராடும் இளைஞர்கள் மீது வழக்குகளைத் தொடுக்கும் கொடுங்கோல் போக்கைக் கைவிட வேண்டுமெனவும், அறவழிப்போராட்டங்களை அனுமதிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.