1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 16 ஜூன் 2021 (13:28 IST)

2 மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்படும் தாஜ்மஹால்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த இரண்டாவது அலையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு முக்கிய சுற்றுலா தளங்களும் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது 4 லட்சமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனை அடுத்து பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன 
 
அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இரண்டு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தாஜ்மஹால் திறக்கப்பட்டதை ஒரே நேரத்தில் 650 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலமாகவே டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்