தொடர்புடைய செய்திகள்
- முதலமைச்சர் தனது அமைச்சர்கள் குழுவோடு நேரில் சென்றிருக்க வேண்டும்: தமிழிசை
- ஸ்டெர்லைட்டுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை; ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழிசை
- தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு!
- தூத்துக்குடி விரையும் ராணுவப்படை?
- ஸ்டெர்லைட் போராட்டம்: தமிழக அரசை கண்டித்து நாளை கடையடைப்பு!
பாஜகவிடம் சரணடைந்த அதிமுக: குஜராத் மாஜி ஐபிஎஸ் ஆவேசம்!
தூத்துகுடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று முன் தினம் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
கலவரத்திற்கு காரணமான மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லை விவகாரத்தில் மக்கள் மாநில அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் குஜராத் மாநில முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தூத்துக்குடி சம்பவம் குரித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களை கொல்ல வேண்டும் என்பது வேதாந்தா நிறுவனம் நடத்திய ஆபரேஷன் ஆகும்.
அதிமுகவின் செயல்பாடுகளை பார்க்கும்போது பாஜகவிடம் அவர்கள் தங்களை சரணடைந்து விட்டதாகவே தெரிகிறது. மோடி தலைமையிலான கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய ஏழை மக்களின் போராட்டம் தமிழகத்தை எட்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
