திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 8 பிப்ரவரி 2024 (17:28 IST)

சரிவில் இருந்து மீண்ட அதானி..! பணக்காரர்கள் பட்டியலில் முன்னேற்றம்..! எத்தனாவது இடம் தெரியுமா.?

adhani
ஒரேவருடத்தில் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு மீண்டும் 100 பில்லியன் டாலரைத் தாண்டியதை அடுத்து, உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 12ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 
 
ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கௌதம் அதானியின் சொத்து மதிப்பில் கூடுதலாக 2.7 பில்லியன் டாலர் சேர்ந்துள்ளது. இதன்மூலம் இவரின் மொத்த சொத்து மதிப்பு 100.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
 
இதன்காரணமாக, உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 12ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 
 
இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி 11ஆவது இடத்தில் இருக்கிறார். அவரது முதன்மையான அதானி எண்டர்பிரைசஸ் கடந்த வாரம் லாபத்தில் 130% உயர்வைக் கொண்டிருந்தது. 

 
அதைத் தொடர்ந்து இன்று, எட்டாவது நாளாக அதானி குழும பங்குகள் உயர்ந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே அவருடைய பங்குகள் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.