மறுகட்டமைக்கப்படும் மும்பை தாராவி! ரூ.5069 கோடியில் அடுக்குமாடி கட்டும் அதானி..!
மும்பையின் தாராவி, உலகின் மிகப்பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றாகும். இது 500,000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதி பல ஆண்டுகளாக புனரமைப்புக்கான திட்டங்களை கண்டிருந்தாலும், தற்போது அதானி குழுமம் 5069 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
5069 கோடி ரூபாய் செலவில் 22,000 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட போவதாகவும், 6.5 லட்சம் சதுர அடி வணிக மற்றும் சமூக உள்கட்டமைப்பை உருவாக்க இருப்பதாகவும், 100 ஏக்கர் பரப்பளவில் பசுமை இடங்களை உருவாக்குவதோடு, தாராவிவாசிகளுக்கு இலவசமாக வீடுகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தாராவிவாசிகளுக்கு மேம்பட்ட வாழ்க்கைத் தரம் கிடைக்கும் என்றும், மும்பையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்றும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.
தாராவி புனரமைப்பு திட்டம் மும்பையின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்றும், இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், தாராவிவாசிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.
Edited by Siva