ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (10:38 IST)

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்.! 2-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா..!

india won
இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 4 இடங்கள் முன்னேறி இந்திய அணி 2 வது இடத்தை பிடித்துள்ளது.
 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்த அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
 
இதை அடுத்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
 
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முன்னேறி உள்ளது. இந்திய அணி நான்கு இடங்கள் முன்னேறி, டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
 
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 55 சதவிகித புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 52.77 சதவிகித புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

 
மூன்றாவது இடத்தில் தென்னாபிரிக்காவும், நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணியும்,
ஐந்தாவது இடத்தில் வங்கதேச அணியும் இடம் பிடித்துள்ளன.