அதானி-ஹிண்டர்பெர்க் வழக்கு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் சரமாரியாக கேள்வி..!
அதானி மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டர்பெர்க் கூறிய குற்றச்சாட்டு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெளிநாட்டு அறிக்கைகளை நாம் ஏன் உண்மை என எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுப்பிய்ச் நீதிபதி அதே நேரம் அந்த அறிக்கையை நாங்கள் நிராகரிக்கவும் இல்லை என தெரிவித்தார்.
அதானி குழுமத்திற்கு எதிராக என்ன ஆதாரம் உள்ளது என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் அதானி ஹிண்டர்பெர்க் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்தார்.
வெளிநாட்டு அறிக்கைகளால் இந்திய பொருளாதாரக் கொள்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது தற்போது புதிய போக்காக மாறி வருகிறது என செபி சார்பில் ஆஜரான சொல்யூசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா விமர்சனம் செய்துள்ளார்.
Edited by Mahendran