வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (13:43 IST)

திருமண பத்திரிகையில் பாஜக வேட்பாளர் புகைப்படம்.. மணமக்கள் மீது போலீசில் புகார்..!

தெலுங்கானா மாநிலத்தில் திருமண பத்திரிகையில் பாஜக வேட்பாளர் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ள நிலையில் மணமக்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் ஏப்ரல் மே 13ஆம் தேதி 17 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரகு நந்தன் ராவ் என்பவர் இங்குள்ள மேதக் என்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்

இவரது ஆதரவாளரான சுரேஷ் என்பவரின் தம்பி திருமணம் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அந்த திருமண பத்திரிகையில் பாஜக வேட்பாளர் ரகுநந்தனின் புகைப்படத்தை அச்சிட்டு உங்கள் ஓட்டு தாமரைக்கு என்று பதிவு செய்யப்பட்டுள்ளது

இதனை அடுத்து காவல்துறையில் மணமக்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Mahendran