1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (08:29 IST)

குஷ்புவுக்கு வாய்ப்பு இல்லை.. வயநாடு வேட்பாளரை அறிவித்தது பாஜக..!

வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்து நடிகை குஷ்பு போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வேறு ஒரு பெண் வேட்பாளரை பாஜக வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் குஷ்பூவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி ரேபரேலி  தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். 
 
இதனை அடுத்து, வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. இதனை அடுத்து, பிரியங்கா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பாஜக வேட்பாளராக நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கோழிக்கோடு மாநகராட்சியில் இரண்டு முறை கவுன்சிலராக இருந்துள்ள நவ்யா கேரளா பாஜக மகளிர் அணி பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். நவ்யா பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர் என்றும், 2021 ஆம் ஆண்டு கேரளா சட்டமன்றத் தேர்தலில் கோழிக்கோடு தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வயநாடு தொகுதியில் இருவரும் பெண் வேட்பாளர்களாக இருப்பதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva