திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2024 (13:29 IST)

வயநாடு தொகுதி இடைத்தேர்தல்.. தயாராகிறார் பிரியங்கா காந்தி.. மீண்டும் ஆனி போட்டி?

ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, இந்த தொகுதியில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட போவதாகவும், அவர் தேர்தல் பணிக்கு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் ஒரு சில வாரங்களில், வயநாடு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் காலியாக உள்ள இரண்டு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் இப்போதே சுறுசுறுப்பாக உள்ளன.

காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரியங்கா காந்தி போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இடது கம்யூனிஸ்ட் சார்பாக ராகுல் காந்தியிடம் தோல்வி அடைந்த ஆனி ராஜா மீண்டும் போட்டியிடுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ஒரு வலிமையான வேட்பாளரை களம் இறக்க பாஜகவும் திட்டமிட்டுள்ளதாகவும், இங்கு மும்முனை போட்டி நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த தொகுதியில்  பிரியங்கா காந்தி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த தொகுதி முழுவதும் ராகுல் காந்தி மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்துள்ளவர்கள் இருப்பதால், பிரியங்கா காந்தி மிக எளிதில் வெற்றி பெற்று விடுவார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Edited by Mahendran