வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 12 அக்டோபர் 2018 (13:43 IST)

ஹோட்டல் அறையில் என்ன நடந்தது தெரியுமா? - நடிகை அதிர்ச்சி தகவல்

பாலிவுட் நடிகை ரேணுகா சஹானே தான் திரைவாழ்வில் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.

 
நாடெங்கும் தற்போது #Metoo என்கிற ஹேஷ்டேக்கில் பல்வேறு துறைய சேர்ந்த பல பெண்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக பேசி வருகின்றனர். கோலிவுட் மட்டுமின்றி, பாலிவுட்டில் பல நடிகர்கள் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது.
 
சமீபத்தில், பாலிவுட் நடிகர் நாடே படேகர் மற்றும் ஆலோக் நாத் மீது பல நடிகைகள் புகார் கூறினர். இதுபற்றி, சல்மான்கான், மாதுரி தீட்சித் இணைந்து நடித்த ஹம் ஆப்கே ஹன் கௌன் படத்தில் நடித்த நடிகை ரேணுகா சஹானே சில தகவல்களை கூறியுள்ளார்.

 
நடிகர் ஆலோக் நாத் படப்பிடிப்பில் நல்லவராக இருப்பார். இரவில், மது அருந்திவிட்டால் வேறோரு மனிதராக மாறி, மூர்க்கத்தனமாக நடந்து கொள்வார் என பல நடிகைகள் கூறி கேள்விப்பட்டிருக்கிறேன். நடிகர் மட்டுமல்ல பெண்களுக்கு பல்வேறு வழிகளில் பாலியல் தொல்லைகள் நேர்கிறது. 
 
ஒருமுறை ஒரு நிகழ்ச்சிக்காக நொய்டா சென்றிருந்த போது, ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்தேன். அப்போது, ரூம் சர்வீஸ் பாய் என் அறைக்கு வந்து, மேடம்.. நான் உங்களின் தீவிர ரசிகர்.. எனக்கூறினார். நான் நன்றி தெரிவித்தேன். அப்போது திடீரென அவர் ஆடையை கழற்றி என் முன் சுய இன்பம் அனுபவிக்க தொடங்கினார். அதைக்கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.
 
அறையிலிருந்து உடனே வெளியேறவில்லை எனில் ஹோட்டல் நிர்வாகத்தில் கூறுவேன் எனக்கூறி அவனை வெளியே அனுப்பினேன். அன்று முதல் என் உதவியாளர் அஸ்வினியை என்னுடன் தங்க வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளேன்.
 
இப்படி, சினிமாத்துறை மட்டுமல்ல. மற்ற இடங்களிலும் ஆண்கள் பெண்களிடம் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள். ஆனால், வெளியே கூற பெண்கள் பயப்படுகிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.