வெளிநாட்டு போலீஸ் போல் சிங்கப்பெண் படைக்கு யூனிபார்ம்.. இதை பார்த்தாலே தப்பு செய்றவன் நடுங்கனும்...!
தமிழக அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையின்கீழ் "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அதிரடிப்படைக்கு மற்ற காவல்துறையினரிடமிருந்து தனித்துவமாக தெரியும் வகையில் பிரத்யேகச் சீருடை மற்றும் புதிய சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தில் தைரியம், வேகம் மற்றும் அறிவுத்திறனைப் பறைசாற்றும் வகையில் சிங்கத்தின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது.
களப்பணியில் துரிதமாச் செயல்படும் வகையிலும், ரோந்து பணிகளை எளிதாக்கும் வகையிலும் இந்த சீருடைகள் நவீன தொழில்நுட்பத்துடன் தைக்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்கவும், மாநிலம் முழுவதும் தொடர் கண்காணிப்பு மற்றும் விரைவான மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்த சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இந்த அதிரடிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவதால், குற்றவாளிகள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது. குறிப்பாக, மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகே பாதுகாப்பை பலப்படுத்துவதே இந்த அமைப்பின் முதன்மை நோக்கம்.
முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி திட்டம், தமிழகத்தை பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாற்றும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாத ஒரு நிர்வாகமாக தவெக அரசு தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
Edited by Siva
