வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 10 மார்ச் 2019 (16:20 IST)

எத்தியோப்ப விமான விபத்து: 157 பேர் பரிதாப பலி

எத்தியோபியாவிலிருந்து நைரோபி சென்ற விமானம் விபத்துக்குள்ளானத்தில் அதில் பயணித்த ஊழியர்கள் பயணிகள் என 157 பேர் பரிதாபமகாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எத்தியோப்பியாவிலிருந்து நைரோபிக்கு போயிங் ரக 737 விமானம் இன்று காலை 8.38 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 149 பயணிகளும் 8 விமான ஊழியர்களும் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட 6வது நிமிடத்தில் கடூப்பாட்டு அறையுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
 
இந்நிலையில் அந்த விமானம் விபத்தில் சிக்கியிருப்பதாகவும் அதில் பயணித்த 149 பயணிகளும் 8 விமான ஊழியர்களும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.