வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 நவம்பர் 2017 (11:38 IST)

மோடியை எதிர்க்கும் சுப்பிரமணியன் சுவாமி: மத்தியில் சர்ச்சை!!

ஆதார் அடையாள அட்டையை அனைத்திற்கும் கட்டாயப்படுத்துவது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தான ஒன்று என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.


 
 
அரசின் சலுகைகள் மற்றும் மானியத்தை பெற அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு கூறி வருகிரது. இதனை எதிர்த்து பல வழக்குகள் போடப்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆதார் மொபைல் எண் இணைப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும் உச்சநீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளது.
 
இந்நிலையில், மத்திய அரசின் கட்டாய ஆதார் அடையாள அட்டை முடிவுக்கு ஆளும் பாஜகவின் ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
ஆதார் என்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை தரக் கூடியது. ஆதார் கட்டாயம் எனும் மத்திய அரசின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்ப உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.