செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 25 செப்டம்பர் 2024 (12:22 IST)

தொழிலதிபர் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

புதுக்கோட்டையில் உள்ள தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 புதுக்கோட்டை அருகே ஒரு கார் வெகுநேரமாக நின்று கொண்டு இருந்ததாகவும் அந்த கார் நீண்ட நேரமாக புறப்படவில்லை என்பதை எடுத்து சந்தேகம் அடைந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் அருகில் சென்று பார்த்தபோது காரின் உள்ளே ஐந்து பேர்கள் ஒருவர் மீது ஒருவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து ஐந்து பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் 5 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விஷம் குடித்து தற்கொலை செய்ததும் தெரிய வந்தது.

இந்த தொழிலதிபர் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் என்றும் புதுக்கோட்டையை சிப்காட் பகுதியில் தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தாய், தந்தை, மகள், மகன் மற்றும் மாமியார் என ஐந்து பேரும் ஒரே காரில் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த காரில் ஒரு கடிதம் சிக்கியதாகவும் அந்த கடிதத்தில் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva