வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (13:32 IST)

பாலியல் குற்றவாளி சுட்டுக்கொலை: இனிப்பு வழங்கி கொண்டாடிய சிவசேனா கட்சியினர்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலியல் குற்றவாளி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிவசேனா கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி வகுப்பு படிக்கும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு, அந்த பள்ளியின் அக்சய் என்ற ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த குழந்தைகள் தங்களுடைய பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அதிரடியாக வழக்கு பதிவு செய்து, அக்சய் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அக்சய் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. இதையடுத்து சிறையில் இருந்து நீதிமன்றம் செல்லும் வழியில் அக்சய் தப்பிக்க முயன்றதை அடுத்து, அவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாலியல் குற்றவாளி கொல்லப்பட்டதை வரவேற்ற சிவசேனா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Mahendran