1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A women stabbed in dindugul

வட்டிக்கு பணம் கொடுக்கும் மஞ்சுளா ஓட ஓட வெட்டிக் கொலை

திண்டுக்கல்
திண்டுக்கல்லில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த மஞ்சுளா ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை செய்து வந்தார்.
 
இந்நிலையில் ஊருக்கு சென்றுவிட்டு திரும்பிய மஞ்சுளாவை, ஒரு மர்ம கும்பல் வழிமறித்தது. நீங்கள் யார் என மஞ்சுளா கேட்டுக்கொண்டிருக்கும் போதே, அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களை எடுத்து மஞ்சுளாவை தாக்க ஆரம்பித்தனர். 
 
உயிருக்கு பயந்து மஞ்சுளா ஓடினார். அவரை விடாத கும்பல், மஞ்சுளாவை விரட்டி விரட்டி வெட்டி சாய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் மஞ்சுளா சம்பவ இடத்திலே பலியானார்.
 
இதுகுறித்து வழக்குப்பதிந்துள்ள போலீஸார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.