புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 15 ஜனவரி 2019 (11:11 IST)

பெண் ஓரினச்சேர்க்கையாளர்களை பிரிக்க முயற்சி: கடைசியில் நடந்த விபரீதம்

ஒடிசாவில் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களை பிரிக்க முயற்சித்த குடும்பத்தினரை அவர்கள் படாதபாடு படுத்திவிட்டனர்.
 
ஒடிசாவை சேர்ந்த சபித்ரி பரிடா என்ர பெண்ணுக்கு மோனலிசா நாயக் என்ற தோழி இருந்தார். இருவரும் இணைபிரியா தோழிகள். ஒன்றாக பள்ளிப்படிப்பை முடித்த இவர்கள் கல்லூரி படிப்பையும் ஒன்றாகவே முடித்தனர்.
 
இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர். பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களின் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
 
ஆனால் அவர்களின் பெற்றோர் இருவரையும் பிரிக்க முயற்சித்ததை அறிந்த இவர்கள், எங்களை பிரித்தால் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் இவர்களின் பெற்றோர் கலக்கத்தில் உள்ளனர்.