திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : ஞாயிறு, 13 ஜனவரி 2019 (10:02 IST)

கீர்த்தி சுரேஷ் திருமண அப்டேட்: கசிந்த முக்கிய தகவல்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் விழா ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
" படிக்கும் போதே நடிகையாக வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு ஏற்படவில்லை . மாடலிங் செய்து வந்தேன். அப்போது கடவுளின் அணுகிரகம் இருந்ததால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து . இப்போது நடிகையாகி விட்டேன். கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். மலையாளத்தில் நான் முதலில் அறிமுகம் ஆகியிருந்தாலும் தமிழ் சினிமாவில் நடித்ததால் தான் எனக்கு ஒரு அடையாளம் மற்றும் அங்கீகாரம் கிடைத்தது.
 
தமிழ் சினிமாவில்  புதுப்புது இயக்குனர்கள் அறிமுகம் ஆகி பல்வேறு வித்தியாசமான படங்களை இயக்குகிறார்கள். படங்களை பார்க்க வரும் ரசிகர்களும் நல்ல தெளிவாகவே உள்ளனர்.
 
என்னால் முடிந்த அளவுக்கு நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இதற்காக கடுமையாக உழைக்கிறேன். திருமணம் செய்யும் ஆசை இப்போது இல்லை. இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். நடிகர் விஜய் கூட நடித்துவிட்டேன். அஜித்குமாருடன் நடிக்க வேண்டும் என்றால் அது நடக்கும்.  அது வரும்போது பார்க்கலாம் என்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்.