வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 11 ஜனவரி 2019 (17:09 IST)

திருமணமா? எனக்கா? விஷால் வெளியிட்ட பரபரப்பு தகவல்

நடிகர் விஷால் தனது திருமணம் குறித்து பத்திரிக்கைகளில் வரும் செய்தியை கடுமையாக விமர்சித்து டுவீட் போட்டுள்ளார்.
2004 ஆம் ஆண்டு செல்லமே படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் பிரபல திரைப்பட தயாரிபபாளர் ஜி.கே.ரெட்டியின் மகன் விஷால். 
 
இதைத்தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிலப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை,  தீராத விளையாட்டு பிள்ளை, சமர், அவன்  இவன், இரும்புத்திரை, சண்டக்கோழி 2 என பல படங்களில் நடித்தார். 
 
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்துடன் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  
 
நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பின் திருமணம் செய்து கொள்வேன் என விஷால் கூறியிருந்தார். ஆனால், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டியின் மகள் அனிஷாவை திருணம் செய்து கொள்ள இருப்பதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் பேசப்பட்டது. 
 
இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்ட விஷால், ஒரு சில பத்திரிக்கைகள், எப்படி இப்படி ஒரு போலியான நியூஸை வெளியிட முடிகிறது. என்னைப் பற்றி போடும்போது என்னிடம் அது உண்மையா என கேட்க வேண்டும். அப்படி செய்யாமல் இப்படி நடந்துகொள்வது தவறு என குறிப்பிட்டுள்ளார்.