திருமணத்தில் துப்பாக்கி ஏந்திய மணப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!
திருமணத்தின்போது கையில் துப்பாக்கிய ஏந்திய மணமகளின் விளையாட்டு வினையாகியுள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவில் திருமண நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நண்பர்கள், உற்றார், உறவினர்கள் சில புதுமையான விளையாட்டுகளில் ஈடுபட்டு விருந்தினர்களையும் மணமக்களையும் மகிழ்விப்பர்.
இந்த நிலையில், ஒரு திருமணத்தின்போது, புதுமணத் தம்பதிகள் முன்பு ஒரு கேக் இருக்க, அவர்கள் கையில் துப்பாக்கியுடன் அதை மேல் நோக்கி வெடிக்கை செய்தனர்.
இதில், மணமகளில் கையில் வைத்திருந்த துப்பாக்கி சட்டென்று தீப்பொறியை கக்கியது, உடனே மணப்பெண் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு, மணமகனை நோக்கித் திரும்பிவிட்டார்.
இதில், மணப்பெண்ணுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.