திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 1 ஏப்ரல் 2023 (18:01 IST)

காதல் தோல்வியால் சாலையில் ரகளை செய்யும் இளம்பெண்....வீடியோ வைரல்

girl
காதல்தோல்வியால் இளம்பெண் ஒருவர் சாலையில் ரகளை செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தில் உள்ள குவாலியர் நகரில்  பூல் பாக் சந்திப்பில், இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் ரகளையில் ஈடுபடும் வீடியோ   ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது.

சாலையில்,  இளம்பெண் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து, மக்களுக்கும் தொல்லை விடுக்கிறார். மேலும், ஒருவரின் ஸ்கூட்டரையும் பறித்துக்கொண்டு சாலை தடுப்புகளையும் கீழே சாய்க்கிறார்.  அவரை சமாதானப்படுத்தி கூட்டிச் செல்ல சில பெண்கள் வந்தனர். அவர்களையும் தள்ளிவிட்டார்.

காதல் தோல்வியால் இளம்பெண் இப்படி செய்ததாகக் கூறப்படுகிறது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.