திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 11 மே 2022 (01:42 IST)

இலங்கையில் துப்பாக்கிச் சூடு - மூவர் காயம்

இலங்கை காலி ரத்கம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.
 
இலங்கை ரத்கம பிரதேச சபை தலைவரின் வீட்டிற்கு அருகில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டது.
 
துப்பாக்கி சூடு எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்து இதுவரை சரியான தகவல் இல்லை என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
 
மேலும், இலங்கையில் இன்று (மே 10ம் தேதி) காலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் 103 வீடுகளுக்கு கடுமையான சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஊடாக இதனை தெரிவித்துள்ளது. இந்த கால பகுதியில் 88 வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
 
 
இந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள