வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2023 (19:57 IST)

அமுல் நிறுவனத்தின் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு

இந்தியாவில் மிகப்பெரிய பால் விநியோக நிறுவனமான அமுல், இன்று பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய பால் விநியோக நிறுவனமான அமுல். குஜராதி மாநிலத்தில், பால் விலை லிட்டருக்கு ரூ .2 உயர்த்தியுள்ளது. அகமதாபாத் மற்றும் செளராஷ்டிரா – கட்ச் ஆகிய சந்தைகளிலும் இதேபோல் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக குஜராத் பால் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமுல் கோல்ட் ரூ.32  க்கும், அமுல் தாசா ரூ.26 க்கும், அமுல் சக்தி ரூ.29 க்கும் விற்பனையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘கடந்த ஆண்டைவிட மாட்டுத்தீவனத்தில் விலை  13-14 சதவீதம் அதிகரித்துள்ளதால், விவசாயிகளுக்கு பால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், பால் விலை  உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் இப்புதிய விலை அமலுக்கு வருவதாக ‘ அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.