''கையில் துப்பாக்கியுடன் கீர்த்தி சுரேஷ்''... நடிகை சமந்தா வெளியிட்ட போஸ்டர் வைரல்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பா. விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் கீர்த்தி சுரேஷ். அதன்பின்னர், ரெமோ, பைரவா, பென்சில் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மகா நடி என்ற படத்தில் நடித்தற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதன்பின்னர், செல்வராகவனும் இணைந்து சாணிக் காயிதம் என்ற படத்தில் நடித்தார்.
இந்த நிலையில், தற்போது, மாமன்னன் படத்தில் உதய நிதியுடனும், நானியுடன் தசசரா என்ற படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ், அடுத்து சந்துரு இயக்கத்தில் ரியால்டா ரீட்டா என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் புதிய போஸ்டரை இன்று சமந்தா ரிலீஸ் செய்துள்ளார்.
துப்பாக்கியை கீர்த்தி சுரேஷ் கையில் வைத்திருப்பது போன்ற இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.