திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 அக்டோபர் 2018 (16:38 IST)

பட்டம் விட எதிர்ப்பு: பெற்றோரை கூண்டோடு காலி செய்த மகன்

டெல்லியில் பட்டம் விட எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் மற்றும் சகோதரியை வாலிபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியை சேர்ந்தவர் மதிலேஷ். இவரது மனைவி சியா. இவர்களுக்கு சுராஜ்(19) என்ற மகனும் ஒரு மகளும் இருந்தனர்.
 
படிப்பின்மீது நாட்டமில்லாத சுராஜ், ஊர் சுற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளான். மேலும் பட்டம் விடும் பந்தயத்திலும் ஈடுபட்டு வந்துள்ளான். இதனால் அவனது பெற்றோர் சுராஜை கடுமையாக கண்டித்துள்ளனர்.
 
இந்நிலையில் பெற்றோர் திட்டியதால் அவர்கள் மீது ஆத்திரத்தில் இருந்த சுராஜ் அவர்களை கொல்ல திட்டமிட்டிருக்கிறான். அதன்படி சில தினங்களுக்கு முன்பு, சுராஜ் தன் தாய் தந்தை மற்றும் சகோதரியை குத்தி கொலை செய்துள்ளான். பின் திருடர்கள் வந்து தன் பெற்றோரை கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக போலீஸிம் நாடகமாடியுள்ளான்.
 
இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீஸார், சுராஜ் மீது சந்தேகமடைந்து அவனிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் சுராஜ் தன் தாய், தந்தை மற்றும் சகோதரியை திட்டமிட்டு கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.
 
இதனையடுத்து போலீஸார் அவனை கைது செய்தனர். விளையாடக்கூடாது என கூறிய பெற்றோரை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.