கிணற்றில் மிதந்த 5 சகோதரர்களின் பிணம்: பெற்றோர்கள் மாயமானதால் பரபரப்பு
மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 முதல் 6 வயதுடைய ஐந்து சகோதரர்கள் கிணத்தில் பிணமாக மிதந்த அதிர்ச்சி சம்பவம் அந்த பகுதியினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சகோதரர்களின் பெற்றோர் தலைமறைவாகியிருப்பதும் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் செந்த்வா என்ற கிராமத்தை சேர்ந்த பட்டார் சிங் என்பவருக்கு இரண்டு மனைவிகள். ஒரு மனைவிக்கு நான்கு குழந்தைகளும் இன்னொரு மனைவிக்கு ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் இந்த ஐந்து குழந்தைகளும் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் போலீசார் ஐந்து குழந்தைகளின் உடலை மிட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் பட்டார் சிங் மற்றும் அவரது முதல் மனைவி திடீரென மாயமாகியுள்ளனர். இரண்டாவது மனைவி தனது ஒரே மகன் பலியானதால் பேச்சுமூச்சின்றி உள்ளார். பட்டார் சிங்கையும் அவரது மனைவியையும் போலீசார் தேடி வருவதாகவும், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே இதுகுறித்து மேல் விசாரணை நடத்த முடியும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.