புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 அக்டோபர் 2018 (13:43 IST)

பாலியல் தொல்லை - காயத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

பாலிவுட் தயாரிப்பாளர் கவுரங் தோஷியும் தொடர்ந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு மட்டுமில்லாமல் தன்னை கடுமையாக தாக்கினார் என நடிகை புளோரா தெரிவித்துள்ளார்.

 
Me too என்கிற ஹேஷ்டேக்கில் நடிகைகள் உள்ளிட்ட பல பெண்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக பேசி வருகின்றனர். கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, பாலிவுட் நடிகர் நானா படேகர் உள்ளிட்ட பலர் மீதும் பாலியல் புகார்கள் குவிந்து வருகிறது.
 
இந்நிலையில், பாலிவுட் தயாரிப்பாளர் கவுரங் தோஷி மீது நடிகை புளோரா பாலியல் புகார் கூறியுள்ளார். இவர் தமிழில் விஜயகாந்த் நடித்த கஜேந்திரா, கார்த்திக்குடன் குஸ்தி, திண்டுக்கல் சாரதி, குசேலன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும், ஆஷா சைனி என்கிற பெயரில் தெலுங்கு, இந்தி, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

 
அவரது முகநூல் பக்கத்தில், தயாரிப்பாளர் கவுரங் தோஷி பற்றி அவர் கூறியிருப்பதாவது:
 
நானும் தயாரிப்பாளர் தோஷியும், சில மாதங்கள் ஒன்றாக சுற்றினோம். 2007ம் ஆண்டு காதலர் தினத்தன்று அவர் என்னை கடுமையாக தாக்கினார். ஒரு வருடம் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும், என்னை அடித்து சித்ரவதை செய்து வந்தார். இதனால் என் தாடையின் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால், அவரை விட்டு விலகினேன். அவர் சினிமாவில் சக்தி மிகுந்தவராக இருந்தார். எனவே, அவரை எதிர்த்து என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என்னை அடிக்கடி மிரட்டியும் வந்தார். எனக்கு வாய்ப்புகள் வராமல் தடுத்தார். இதனால் மனம் உடைந்து போனேன். என் வாழ்க்கையையே அவர் சிதைத்து விட்டார்” என புலம்பியுள்ளார்.
 
இவரின் புகார் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.