அரியலூருக்கு விரையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த அரியலூர் வீரர் சிவச்சந்திரன், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணி ஆகியோரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் அரியலூர், தூத்துக்குடிக்கு விரைகிறார்கள்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது. இது நாடெங்கும் கடும் அதிர்வலைகளையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்ற வீரரும் அரியலூர் கார்குடியை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற வீரரும் வீர மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது அவர்களது உடல்கள் திருச்சிக்கு வந்துள்ளது. கார்குடியை சேர்ந்த சிவச்சந்திரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் எடப்பாடி அரியலூர் விரைகிறார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சுப்ரமணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த துணை முதல்வர் தூத்துக்குடிக்கு செல்கிறார்.