1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2023 (16:30 IST)

நியூஸ்கிளிக்’ பத்திரிகை அலுவலகத்தில் ரெய்டு: எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இன்று காலை முதல் டெல்லியில் உள்ள நியூஸ் க்ளிக் என்ற பத்திரிகை அலுவலகத்தில்  டெல்லி சிறப்பு பிரிவு போலீஸ் ஆர் சோதனை நடத்திவரும் நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
அதே நேரத்தில் யாராவது தவறு செய்திருந்தால் விதிமுறைகளையும் படி விசாரணை நடத்த விசாரணை நிறுவனங்களுக்கு சுதந்திரம் உண்டு என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று காலை முதல் நியூஸ் க்ளிக் செய்தியாளர்களின் வீடுகளிலும் சோதனை நடந்து வருவதாகவும் இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva