வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (19:03 IST)

இரும்பு, நட்டு, காந்தம் உள்ளிட்ட பொருட்களை விழுங்கிய நபர்...மருத்துவர்கள் அதிர்ச்சி

iron, magnet,
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த   நபர் ஒருவரின் வயிற்றில் இருந்து இரும்பு, நட்டு உள்ளிட்ட பொருட்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
 

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த  40  நபர் ஒருவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டுள்ள அந்த நபருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, மருத்துவர்கள் அந்த நபரை பரிசோதனை செய்தனர். அதில், அவரது வயிற்குக்குள் இரும்பு, காந்தம், ஹெட்செட் உள்ளிட்ட பலவேறு பொருட்கள் இருப்பதைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், 3 மணி நேரம் போராடி அந்த வாலிபரின் வயிற்க்குள் இருந்த பொருட்களை அகற்றி அந்த நபரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.