1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2023 (20:15 IST)

கரூர்: இளையோர் தடகளப் போட்டிக்கு செல்லும் 74 வீரர்கள்

sports
37 வது மாநில இளையோர் தடகளப் போட்டிக்கு கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் பங்கேற்கும் 74 வீரர், வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
37ஆவது மாநில இளையோர் தடகளப்போட்டி திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் வரும் 14ஆம் தேதி துவங்கி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 
இதில் கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் 74 வீரர்கள் 37வது மாநில தடகள போட்டியில் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வழி அனுப்பும் நிகழ்வு கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
 
ஓய்வு பெற்ற முன்னாள் தடகள வீரரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான விஜயகுமார் தலைமையில் மாநில தடகள சங்கம், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்கமும் இணைந்து வீரர், வீராங்கனைகளுக்கு டீ சர்ட்டுகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.