ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (13:01 IST)

இளைஞரணி மாநில மாநாடு சரித்திரம் படைக்கட்டும்.- அமைச்சர் உதயநிதி

சேலம் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள இளைஞரணியின் மாநில மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகள் குறித்தும் ஆலோசனைகளை அமைச்சர் உதயநிதி மேற்கொண்டார்.

இதுகுறித்து உதய நிதி தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''தமிழர்தம் வாழ்வு உயர தன் வாழ்வெல்லாம் உழைத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி,  திமுக இளைஞரணி-க்கு கலைஞர் படிப்பகம் அமைத்தல், கலைஞர் மாரத்தான், கலைஞர் சொற்பொழிவு போட்டிகளை நடத்துவது ஆகிய பொறுப்புகளை கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒப்படைத்துள்ளார்கள். 
 
அதன் ஏற்பாட்டு பணிகள் குறித்து கழக இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர்களுடன் இன்று காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினோம்.
 
இக்கூட்டத்தில், சேலத்தில் டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள இளைஞரணியின் மாநில மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொண்டோம்.
 
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞரணி மாநில மாநாடு சரித்திரம் படைக்கட்டும்.''என்று தெரிவித்துள்ளார்.