செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2023 (17:40 IST)

கழுத்தில் டாட்டூ குத்தி கொண்ட 22 வயது இளைஞர் பரிதாப மரணம்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கழுத்தில் டாட்டூ குத்திய  நிலையில் அதன் காரணமாக அவர் மரணமடைந்தது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளது. 
 
பெரம்பூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் பரத் என்பவர் கழுத்து பகுதியில் சமீபத்தில் டாட்டூ குத்தி கொண்டார். இதன் காரணமாக அவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. 
 
டாட்டூ குத்தியை இடத்தில் கட்டி உருவாகி வலி அதிகரித்ததன் காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை மருத்துவர்கள் அகற்றிய நிலையில்  அவர் திடீரென உயிரிழந்தார். 
 
கழுத்தில் ஆட்டோ குத்திக் கொண்டதால் கட்டி உருவாகி உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran