1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (13:17 IST)

குழந்தை கடத்தல் வதந்தி - விழிப்புணர்வு செய்த நபரையே அடித்துக் கொன்ற பொதுமக்கள்

திரிபுராவில் குழந்தைக் கடத்தல் வதந்திகளால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து விழிப்புணர்வு செய்த நபரே சந்தேகத்தில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை கடத்தல் சம்மந்தமாக பரப்பப்படும் வதந்திகளால் அப்பாவி பொதுமக்கள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
 
இந்நிலையில் திரிபுராவில் குழந்தை கடத்தல் சம்மந்தமாக பரப்பப்பட்ட பொய்யான வதந்தியால் சந்தேகத்தின் பேரில் தெருவோர வியாபாரி ஒருவரையும், மனநலம் பாதிக்கப்பட்டவரையும் கிராம மக்கள் அடித்தே கொன்றனர்.
 
இதனைத் தடுக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும்  திரிபுரா அரசு  சக்ரவர்த்தி என்பவரை விழிப்புணர்வு ஏற்படுத்த நியமித்தது. அவர் ஒலிப்பெருக்கி மூலம் குழந்தை கடத்தல் வதந்திகளை நம்ப வேண்டாம் என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்தார்.
 
சக்ரவர்த்தி பணி முடிந்த பிறகு அதே வண்டியில் மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை குழந்தைக் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என நினைத்து மக்கள் அவரை வழிமறித்து தாக்கினர். அவர் எவ்வளவோ கூறியும், அதனை நம்ப மறுத்த மக்கள் சக்ரவர்த்தியை அடித்தே கொன்றனர்.
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், இது சம்மந்தமாக 15 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.