1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 29 ஜூன் 2018 (21:26 IST)

கொலை மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படுபவன் நான் அல்ல - பிரகாஷ்ராஜ்

கொலை மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படுபவன் நான் அல்ல என பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து பாஜகவினருக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். தன்னுடையை டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக அவர் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்.
 
பிரகாஷ்ராஜின் நண்பரும், பத்திரிக்கையாளருமான கவுரி படுகொலை செய்யப்பட்டதற்கு பாஜகவை அவர் கடுமையாக விமர்சித்தார். இந்த கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில்  நடிகர்கள் பிரகாஷ்ராஜ், கிரிஷ் கர்நாட் மற்றும் சில எழுத்தாளர்களை கொல்ல திட்டமிடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில்  இதுகுறித்து பேசிய பிரகாஷ்ராஜ் இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுபவன் நான் அல்ல. இப்படி செய்யும்போது தான் எனது குரல் மேலும் வலிமையாக ஒலிக்கும். கோழைகளே இந்த வெறுப்பு அரசியலை விட்டு வெளியே வாருங்கள் என அவர் கூறியுள்ளார்.