திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2019 (16:15 IST)

ராகுல் காந்திக்கு கிடைத்த அன்பு முத்தம்: வைரலாகும் வீடியோ

கேரள மாநிலத்தில் சுற்று பயணம் செய்துகொண்டிருக்கும் போது, ஒரு தொண்டர், ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவில் 4 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். இன்று வயநாடு சென்ற ராகுல் காந்தி, ஓரிடத்தில் காரை நிறுத்தி தொண்டர்களை சந்தித்து கைகுலுக்கினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ஆதரவாளர் ராகுலுக்கு கைகுலுக்கி முத்தம் கொடுத்தார். இதனை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பரவவிட்டார் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.