செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (17:24 IST)

ராகுல் காந்தி மீது குற்றம் சுமத்திய காஷ்மீர் ஆளுநர்.. காங்கிரஸார் அதிருப்தி

சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி ஜம்மு - காஷ்மீர். லடாக் ஆகிய பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக அறிவித்துவிட்டது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் பல்வேறு தலைவர்கள் தெரிவித்துவருகின்றார்கள்.
இதற்கு அண்டைநாடான பாகிஸ்தான் கடும் எதிப்பு தெரிவித்து அமெரிக்கா, சீனா முதல் ஐநா வரை சென்று முறையிட்டும் அது இந்திய நாட்டு உள்விவகாரம் என்று கூறி பாகிஸ்தனின் வாயை அடைத்துவிட்டது. இருப்பினும் காஷ்மீரின் சில பகுதிகளில் இன்னும் தொலைபேசி, இணையம்  இணைப்பு தரப்படவில்லை எனவும், சில இடங்களீல் இன்னமும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாகவும் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
 
இந்நிலையில் நேற்று காஷ்மீர் மாநிலம் செல்ல விமானத்தில் ஏறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் காஷ்மீர் மக்கள் பலர் அங்குள்ள நிலவரன் குறித்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து காஷ்மீருக்குள் நுழையா காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
 
இந்நிலையில்  காஷ்மீர் மாநில கவர்னர் சத்ய மால் மாலிக் , ராகுல் காந்தி மீது  குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளிட்டுள்ளதாவது : காஷ்மீரின் அமைதியை சீர்குலைகும் எண்ணத்துடன் அரசியல்வாதிகள் யாரும்  வரவேண்டாம். ராகுல்காந்தி தனது அழைப்பை அரசியலாக்கியதால்தான் அந்த அழைப்பை நான் திரும்ப பெற்றேன். ராகுல் காந்தி தவறான தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பதன் முலம் காஷ்மீருக்கு நெருக்கடியை ஏற்படுத்திவருகிறார் என தெரிவித்துள்ளார்.
.