வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (06:52 IST)

மோடிக்கு இணையான எதிர்க்கட்சி தலைவர் இல்லை: கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

பாரத பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்று மூன்று வருடங்கள் ஆகியுள்ள நிலையில் அவருடைய செல்வாக்கு எப்படி உள்ளது என்பது குறித்து ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பின் மூலம் மோடிக்கு இணையான தலைவர்கள் எதிர்க்கட்சியில் இல்லாததால் மீண்டும் மோடி பிரதமராக வாய்ப்புகள் அதிகம் என்று தெரியவந்துள்ளது.



 
 
இன்றைய நிலையில் மக்களவைக்கு தேர்தல் வந்தால் கூட நாடு முழுவதும் மோடி தலைமையிலான பாஜகவுக்கு 42% வாக்குகள் விழ வாய்ப்புகள் உள்ளதாகவும், இதன் காரணமாக அந்த கட்சிக்கு 349 தொகுதிகள் கிடைக்கும் என்றும் அந்த சர்வே கூறுகிறது.
 
விவசாயிகள் பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டம், உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு ஆகியவை மோடியின் பெயருக்கு களங்கள் விளைவிக்கவில்லை என்றும் மோடி தலைமையில் இந்தியா முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
மோடியின் உலக நாடுகள் சுற்றுப்பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமே கேலி செய்து வருவதாகவும், அவரது பயணத்தால் இந்தியாவின் மதிப்பு உலக நாடுகளில் உயர்ந்துள்ளது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் மோடியை எதிர்த்து அரசியல் செய்து வரும் ராகுல்காந்திகு 21% மட்டுமே மக்கள் ஆதரவு இருப்பதாகவும், அதேபோல் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேசிய அளவில் 6% மட்டுமே ஆதரவு இருப்பதாகவும், அந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.