துபாயில் கிரிக்கெட் அகாடமி தொடங்கும் தோனி


Abimukatheesh| Last Updated: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (10:58 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி துபாயில் பசபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை தொடங்க இருக்கிறார்.

 

 
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்து அணியில் விளையாடி வருகிறார். இந்திய அணியில் தோனி தொடர்ந்து விளையாட வேண்டாம் என்ற கருத்தை பலரும் தெரிவித்து வருகின்றனர். 
 
இதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தோனி துபாயைச் சேர்ந்த பசபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து அந்நாட்டில் கிரிக்கெட் அகாடமியை தொடங்க உள்ளார். ஏற்கனவே சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் கிரிக்கெட் அகாடமி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :