குடிபோதையில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவிக்கு துரோகம் செய்த கணவன்!!

gun
Last Modified செவ்வாய், 11 டிசம்பர் 2018 (12:37 IST)
குடிபோதையில் நண்பர்களுடன் சேர்ந்து கணவன் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்தவன் ஹர்கேஷ் குமார். இவரது மனைவி கவிதா குமாரி. இவர்கள் இருவருக்கும் 8 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. ஹர்கேஷ் குமார் மதுப்பழக்கம் உடையவன். இதனால் கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது சண்டை இருந்து வந்துள்ளது. கோபமடைந்த கவிதா, தனது பிள்ளைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
 
மனைவி மீது கடும் கோபத்தில் இருந்த கொடூரன் ஹர்கேஷ் குமார், குடிபோதையில் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு சென்று தனது மனைவியிடம் சண்டையிட்டுள்ளான். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போகவே கோபமடைந்த ஹர்கேஷ் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
கவிதா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள போலீஸார், அந்த கொடூரன் ஹர்கேஷையும் அவனது நண்பர்களையும் தேடி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :