புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (14:41 IST)

வெளிநாட்டில் கணவன் செய்த மன்மத லீலைகள்: அதிர்ந்து ஷாக் ஆன மனைவி

வெளிநாட்டிற்கு சென்ற கணவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அறிந்த மனைவி பேரதிர்ச்சிக்கு ஆளானார்.
 
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஹரிஷ்குமார் என்பவருக்கு 2005ல் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் அவர் வெளிநாட்டிற்கு வேலை பார்க்க சென்றுவிட்டார். பின்னர் அவ்வப்போது மனைவியை பார்த்து சென்றார். ஒரு கட்டத்தில் தனது மனைவியை பார்ப்பதையும் அவரிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டார்.
 
இதனால் சந்தேகமடைந்த ஹரிஷின் மனைவி, இதுகுறித்து விசாரித்தபோது ஹரிஷ் 2016ல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.
 
இதனையடுத்து காவல் நிலையம் சென்ற அவர், ஹரிஷ் மீது புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.