வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (11:11 IST)

நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது - உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினியை முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக நளினி, பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். சமீபத்தில் பேரறிவாளன் பரோலில் வெளியே வந்து பின் சிறைக்கு சென்றார்.
 
இந்நிலையில் நளினி தண்டனைக் காலம் முடியும் முன்னே விடுவிக்கும்படி தமிழக அரசுக்கும், உயர்நீதிமன்றத்திலும் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினி, பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உயர்நீதிமன்றம் நளினியை முன்கூட்டியே விடுவிக்க உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளது.