பினராயி விஜயனின் தலையை வெட்டுவோம் - நக்சலைட்டுகள் கொலை மிரட்டல்
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நக்சலைட்டுகள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்கடு மாவட்டம் பழையனூர் பகுதியில் உள்ள காவல் நிலையம் அருகே சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், கேரள ஆதிவாசிகளின் பிரச்சனையை சரி செய்யாத விஜயனின் தலையை வெட்டுவோம் என எழுதியுள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள நக்சல்பாரி இயக்கத்தினர் இந்த போஸ்டரை ஒட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
கேரளாவை சேர்ந்த ஆதிவாச இளைஞர் மது என்பவர் அரிசி திருடிய போது அடித்துக்கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், சிறீஜீத் என்கிற ஆதிவாசி இளைஞர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டார். இப்படி ஆதிவாச மக்கள் தாக்குதலுக்கு உள்ளாவதை கண்டித்தே இப்படி போஸ்டர் ஒட்டியிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.