வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (21:04 IST)

2026ல் வேறு மாதிரி கூட்டணியா.? அமைச்சர் கே.என் நேருவின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை பதில்.!!

Selvaperundagai
2026-ல் வேறு மாதிரி கூட்டணி இருக்கும் என அமைச்சர் கே.என் நேரு கூறியிருந்த நிலையில்,  தேர்தல் கூட்டணி விஷயத்தில் திமுக தலைமை சொல்வதற்கு முக்கியத்துவம் அளிப்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
 
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் சந்தித்து பேசினார்கள். பின்னர் செய்தியாளரிடம் பேசிய செல்வப்பெருந்தகை, டி.கே சிவகுமார், அரசு முறை பயணமாக வந்திருப்பதால் காங்கிரஸ் அலுவலகத்திற்கு அவரால் வர முடியவில்லை என்று கூறினார்.
 
தமிழ்நாட்டு நலனுக்கு என்னென்ன தேவையோ, தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு என்னென்ன தேவையோ, தமிழ்நாட்டு உரிமைகளுக்கு என்னென்ன தேவையோ, எல்லாவற்றையும் பேசியிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார். 

உச்சநீதிமன்றத்தின் ஆணை மற்றும் காவேரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி உறுதியாக இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார். தமிழ்நாட்டு மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம் அதில் எந்தவிதமான சமரசமும் கிடையாது என்று அவர் கூறினார்.

 
2026-ல் வேறு மாதிரி கூட்டணி இருக்கும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, தேர்தல் கூட்டணி விஷயத்தில் திமுக தலைமை சொல்வதற்கு முக்கியத்துவம் அளிப்போம் என்று குறிப்பிட்டார்.