திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2023 (11:41 IST)

சனாதன தர்மம் குறித்து சர்ச்சை கருத்து: அமைச்சர் உதயநிதி மீது உ.பி.யில் வழக்குப்பதிவு

சனாதன தர்மம் குறித்து சர்ச்சை கருத்து: அமைச்சர் உதயநிதி மீது உ.பி.யில் வழக்குப்பதிவு
சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேச மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் காவல் நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் ஹர்ஷ் குப்தா மற்றும் ராம் சிங் லோதி  ஆகியவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மேலும் சனாதன தர்மம் குறித்து கருத்து கூறிய கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran