1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (21:06 IST)

அமைச்சர் உதயநிதியின் கருத்திற்கு பா.ரஞ்சித் ஆதரவு

''சமூகநீதி மற்றும் தத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதியின் கருத்திற்கு துணை நிற்பதாகத்’’ இயக்குனர் பா.ரஞ்சித்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி, சனாதனம் பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார். இவரது பேச்சு அரசியலில் விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில்,  பாஜக உள்ளிட்ட கட்சிகள்  உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றது.

இதையடுத்து நேற்று, உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்ற சாமியார், ‘உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி கொடுப்பதாக அறிவித்திருந்தது பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,   அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: 

‘’அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பல நூற்றாண்டுகளாக சாதி எதிர்ப்பு இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. புரட்சித் தலைவர் அம்பேத்கர், அயோத்திதாஸ் பண்டிதர், தந்தை பெரியார், மகாத்மா பூலே துறவி ரவிதாஸ் போன்ற சாதியை எதிர்த்த சீர்திருத்தவாதிகள் தங்கள் சித்தாந்தத்தில் இதையே கூறியுள்ளனர். அமைச்சரின் பேச்சை திரித்துப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது… சமூக நீதி மற்றும் தத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதியின் கருத்திற்கு துணை நிற்பதாகத்’’ தெரிவித்துள்ளார்.