சிறைவாசம் உங்களுக்கு புதிதல்ல...சவுக்கு சங்கர் பற்றி பிரபல ஊடகவியலாளர் டுவீட்!
சவுக்கு சங்கர் பற்றி பிரபல ஊடகவியலாளர் தன் டுவிட்டர் பக்கத்தில் , என் நெஞ்சமெல்லாம் நிறைந் திருக்கும் அன்பானவர் சவுக்கு என்று ஒரு பதிவிட்டுள்ளார்.
பிரபல யூட்யூபராகவும், பத்திரிக்கையாளராகவும் இருந்து வருபவர் சவுக்கு சங்கர். இவரது சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துகளுக்காக அடிக்கடி ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறார். சமீபத்தில் யூட்யூப் பேட்டி ஒன்றில் பேசிய அவர் நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதுகுறித்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி நீதிமன்றம் தானாகவே வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து மதுரை உயர்நீதிமன்றகிளை சவுக்கு சங்கருக்கு 6 மாத காலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் தன் டுவிட்டர் பக்கத்தில், சிறைத்தடனை முடித்துவிட்டு மீண்டு திரும்ப வருவேன் என்று பதிவிட்டுள்ளார்.
சவுக்கு சங்கரைஅடிக்கடி நேர்காணல் நடத்தும் பிரபல ஊகடவியலாளர் மாதேஷ்,என் நெஞ்சமெல்லாம் நிறைந் திருக்கும் அன்பானவர் சவுக்கு